அரசாங்க பாடசாலைகளில் உள்ள 32 ஆயிரம் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக கல்வியமைச்சு போட்டிப் பரீட்சையை நடாத்தவுள்ளது.
அடுத்தாண்டு ஒய்வுபெறும் 10 ஆயிரம் ஆசிரியர்களுடன் இந்த வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.  ஏற்கனவே 22 ஆயிரம் ஆசிரிய வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையிலேயே புதிய ஓய்வூதிய வயது எல்லை காரணமாக 10 ஆசிரியர்கள் ஓய்வு பெறுகிறார்கள். 
அடுத்த மாதம் இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான பட்டதாரிகளிடையே போட்டிப் பரீட்சை நடைபெறும். தற்போது பாடசாலைகளில் பணிபுரியும் அபிவிருத்தி உதவியாளர்கள், அரசதுறையில் பணிபுரியும் பட்டதாரிகளுக்கு இந்தப் பரீட்சையில் தோற்றலாம். இந்த நியமங்களை மேற்கொள்வதற்காக பொதுச் சேவை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியிருப்பதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இவ்வாறு இணைத்துக் கொள்ளப்படும் ஆசிரியர்கள் ஒரு வருட டிப்ளோமா பயிற்சியை பெறவேண்டும். 
அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் இவர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள். 2023 ஜனவரியில் ஓய்வுபெறும் 10 ஆயிரம் ஆசிரியர்களில் 7 ஆயிரம் வர்த்தக, விஞ்ஞான, கணித ஆசிரியர்கள் என்று கல்வியமைச்சு தெரிவித்தது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.