இந்தாண்டின் முழு சந்திர கிரகணம் இன்று (08) நிகழ உள்ளது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் சந்திர கிரகணத்தைக் காணலாம்.

ஜோதிட ரீதியாக ராகு அல்லது கேதுவின் பாகையில் சூரியன் – சந்திரன் இணையும் போது சூரிய கிரகணம் ஏற்படும். சூரியன் சந்திரன் ஒரே பாகையில் இருக்கும் போது அமாவாசையாகும். அதேபோல் சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் பயணிக்கும் போது ராகுவையோ அல்லது கேதுவையோ தொடும் போது சந்திர கிரகணம் ஏற்படும். சூரியனும் சந்திரனும் நேர்கோட்டில் அதாவது 180 டிகிரியில் இருப்பது பௌர்ணமியாகும்.

இந்த கிரகணத்தின் ஆரம்ப நிலையை இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும் காண இயலாது. முழுமையான மற்றும் பகுதி அளவு சந்திர கிரகணத்தின் நிலைகளை கொல்கத்தா, குவாஹாட்டி, கோஹிமா, அகா்தலா உள்ளிட்ட நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலிருந்து காணலாம். சந்திர கிரகணத்தின் பிற்பகுதி நிலைகள் மற்றும் முடிவு மட்டுமே நாட்டின் பிற பகுதிகளிலிருந்து காணக் கூடியதாக இருக்கும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.39 மணியளவில் சந்திர கிரகணம் தொடங்குகிறது. முழு சந்திர கிரகணம் பிற்பகல் 3.46 மணியளவில் தொடங்கி, 5.12 மணி வரை இருக்கும். பின்னா், பகுதி அளவு சந்திரகிரகணம் 6.19 மணியளவிலும் முடிவடைகிறது.

உணவு எடுத்துக்கொள்பவர்கள் மதியம் 12 மணிக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய நட்சத்திரங்கள் : அஸ்வினி, பரணி, கிருத்திகை, பூரம், பூராடம்

தானம் செய்ய வேண்டிய பொருள்கள் : அரிசி – உளுந்து – தேங்காய் – வெற்றிலை பாக்கு பழம் – தக்ஷணை

மாலை 6:30 மணிக்கு மேல் ஸ்நானம் செய்து சந்திர தரிசனம் செய்த பின் தானம் கொடுத்த பின் உணவு எடுத்துக்கொள்ளலாம். 




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.