21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 71 ஆவது ஊடகக் கருத்தரங்கு கொழும்பு அல் – ஹிக்மா கல்லூரியில் நடைபெற்றது.
இதன்போது, முஸ்லிம் மீடியா போரத்தி தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் நடைபெற்ற இவ் ஊடகக் கருத்தரங்கில், முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியஸ்தர்களான முன்னாள் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம்.அமீன், தாஹா முஸம்மில், எம்.ஏ.எம்.நிலாம், ஜெம்ஸித் அஸீஸ், ஜாவிட் முனவ்வர், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் செய்தி – உதவிப் பணிப்பாளர் ஜுனைட் எம். ஹாரிஸ், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் ஆகியோர் விரிவுரைகளை நடாத்தினார்கள்.
போரத்தின் பொதுச் செயலாளர் சிஹார் அனீஸ் , செயற்பாட்டு உறுப்பினர்களான ஆசிரியை சாமிலா, நளீர் ஜமால்தீன், உப செயலாளா் சாதீக் சிஹான் ஆகியோரும் கலந்து கொண்டனா்.