இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணி தலைவர் 9 ஏ சித்திகளை பெற்று சாதனை

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.

இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணரத்ன (வயது 17) இந்த வருட க.பொ.த பொதுப்பரீட்சையில் 9 சித்திகளுடன் சித்தியடைந்துள்ளார்.

கம்பஹா ரத்னாவலி பெண்கள் கல்லூரி மாணவியான இவர், இலங்கை 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் தலைவராகவும் உள்ளார்.

நாடளாவிய ரீதியில் மே 23 முதல் ஜூன் 01 வரை 3,845 மையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு 518,245 பரீட்சார்த்திகள் முகம்கொடுத்தனர். அவர்களில் 407,785 பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,460 தனியார் விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.