படம் - Online Kabhar

நேபாளத்தில் ஏற்பட்ட 6.3 அளவிலான நிலநடுக்கம் காரணமாக அங்கு 6 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் உணரப்பட்டது.

டெல்லி தேசிய தலைநகர் மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை இரண்டு மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக இந்தியாவின் நில நடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

டெல்லி தலைநகர் பகுதியில் சுமார் 20 விநாடிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கம் நவம்பர் 9ஆம் தேதியன்று 1:57 மணிக்கு ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் மையம் 10 கிமீ ஆழத்தில் இருந்தது.

டெல்லியில் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வு பலமாக இருந்தது. பல பகுதிகளில் இரவு நேரத்திலேயே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர்.

நிலநடுக்கத்தின்போது செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை

நிலநடுக்கம் ஏற்படும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் அதன் இணையதளத்தில் சில அறிவுரைகளைக் குறிப்பிட்டுள்ளது.

  • அமைதியாக இருங்கள், மற்றவர்களையும் சமாதானப்படுத்துங்கள்.
  • நிலநடுக்கத்தின் போது, கட்டடங்களில் இருந்து விலகியிருக்கும் திறந்த வெளி தான் பாதுகாப்பான இடம்.
  • நீங்கள் வீட்டிற்குள் இருந்தால், மேசை, படுக்கை அல்லது கதவுகளின் கீழ் மற்றும் உள்ளே சுவர்கள் மற்றும் படிக்கட்டுகளுக்கு எதிராக மறைந்து கொள்ளவும். கண்ணாடி கதவுகள், கண்ணாடி பலகைகள், ஜன்னல்கள், வெளிப்புற கதவுகளிலிருந்து விலகி இருங்கள். நெரிசலைத் தவிர்க்க, கட்டடத்தை விட்டு வெளியே செல்ல அவசரப்பட வேண்டாம்.
  • நீங்கள் வெளியில் இருந்தால், கட்டடங்கள் மற்றும் மின் கம்பிகளில் இருந்து விலகிச் செல்லவும்.
  • திறந்த வெளிக்கு வந்துவிட்டால், நில அதிர்வுகள் நிற்கும் வரை அங்கேயே இருங்கள்.
  • வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தால், முடிந்தவரை விரைவாக வாகனத்தை நிறுத்திவிட்டு வாகனத்திலேயே இருங்கள்.
  • அனைத்து செல்லப்பிராணிகள், வளர்ப்பு உயிரினங்களை பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய இடத்திலிருந்து தப்பிப்பதற்காக விடுவிக்கவும்.

 BBC தமிழ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.