தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான திருத்தப்பட்ட கட்டண முறை இன்று (01) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிப்பதற்காக 500 ரூபா கட்டணம் அறவிடப்படவுள்ளதுடன், தொலைந்துபோன தேசிய அடையாள அட்டையின் நகலை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

மேலும் முதல் தடவையாக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 200 ரூபாவும், ஒரு நாள் சேவையின் ஊடாக தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 2,000 ரூபாவும் அறவிடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை திருத்தப்பட்ட நகல் மற்றும் நகல்களை வழங்குவதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.