⏩ சில நகர அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கும் போது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் காணியின் உண்மையான தேவையை கண்டுகொள்வதில்லை - அந்த அதிகாரசபையின் தலைவர் குற்றச்சாட்டு.                                                         


      

நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் சில நகர அபிவிருத்தி திட்டங்களை தயாரிக்கும் போது காணியின் உண்மையான தேவையை கண்டுகொள்ளவதில்லை என நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப நகர திட்டங்களை தயாரித்து அமுல்படுத்துவதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் இவ்வாறு தயாரிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் வெற்றியளிப்பதில்லை எனவும் தலைவர் சுட்டிக்காட்டினார்.

திங்கட்கிழமை (31)  நடைபெற்ற உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு கதிர்காமத்தில் நடைபெற்ற விசேட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் திரு.நிமேஷ் ஹேரத் தெரிவித்தார்.

அக்டோபர் 31 அன்று உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் தலைவர் கூறியாதவது , ‘இங்குள்ள வியாபாரிகள் பலர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை சந்தித்து தமது பிரச்சினைகளை முன்வைத்துள்ளனர்.இவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதை நானும் அமைச்சரும்  இன்று புரிந்துகொண்டு இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க செயற்பட்டு வருகின்றோம்.

நாட்டின் தற்போதைய நிலைமையை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.முன்பு கட்டப்பட்ட ஒன்றை இடித்து மீளக் கட்டியெழுப்பலாம் ஆனால் அதற்கான நிதிவசதிகள்; இல்லாததால் இப்போது செய்ய முடியாது. இது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு மாத்திரமல்ல. ஆனால் முழு நாட்டிற்கும் இப்போதைக்கு முடியாதுள்ளது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

"கதிர்காமம் புண்ணிய பூமி நுழைவாயில் சதுக்க வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 34 புதிய கடைகளின் திறப்பு விழா தலைவர் தலைமையில் நடைபெற்றது.

கதிர்காமம் பூஜா மைதானத்தில் வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்களுக்கு இக்கடைகள் வழங்கப்பட உள்ளன.120 சதுர அடி கொண்ட கடை அறைக்கு, முதற்கட்டமாக 3 லட்சம் ரூபாய் செலுத்தி அதன்பின் மாதந்தோறும் செலுத்த வேண்டும்.

கதிர்காமம் புண்ணிய பூமியின் நுழைவு சதுக்க வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மொத்த கடைகளின் எண்ணிக்கை 264 ஆகும். இங்கு 2017 ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையால் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டது.  மேலும் 2019 ஆம் ஆண்டு முதல் பல கட்டங்களாக பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 21 கடைகள் கட்டுமானத்தில் உள்ளது.

கதிர்காமம் பூஜா மைதானத்தின் நுழைவு சதுக்கப் பகுதியில் உள்ள கடைகளை அவதானித்த தலைவர் அங்கு கடை உரிமையாளர்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்தார். 

பின்னர் உலக நகர தினத்தை முன்னிட்டு கதிர்காமம் உள்;ளுராட்சி மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர்  கதிர்காமம் புண்ணிய பூமியின் உள்ள கடைக்காரர்களின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடிய தலைவர், அவற்றுக்கான தீர்வுகளை உடனடியாக வழங்குமாறு தலைவருக்கு பணிப்புரை வழங்கினார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட கதிர்காமம் நகர அபிவிருத்தித் திட்டம் : 2021-2030 தலைவருக்கு வழங்கப்பட்டது.

கதிர்காமம் புனித வளாகத்தில் 21 கடை உரிமையாளர்களுக்கு குத்தகை ஒப்பந்தங்களும் தலைவரால் வழங்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான கதிர்காமம் புதிய சுற்றுலா பங்களாக்கள், கதிர்காம கங்காராம விமான நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கடைகள் மற்றும் செல்லகத்கதிர்காமம் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஓய்வு பூங்கா போன்றவற்றையும் தலைவர் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் ஊவா மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் குணதிலக பண்டார, மொனராகல அலுவலக உதவிப் பணிப்பாளர் சுனில் காரியவசம், மொனராகலை உதவி உள்;ராட்சி ஆணையாளர் மற்றும் கதிர்காமம் பிராந்திய சபையின் அதிகாரம் பெற்ற உத்தியோகத்தர் திரு.டி.எம்.என். திஸாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.                              

2022.11.02


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.