ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்படும் நபர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இதன்படி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து மகிந்த அமரவீர நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளதுடன் புதிய பொருளாளராக சாரதி துஷ்மந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.