இலங்கையில் நடைபெறவுள்ள ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

28 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி இரண்டு குழுக்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் 14 பேர் கொண்ட முதல் குழு இன்று காலை 08.30 மணியளவில் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

14 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணியின் அடுத்த குழு இன்று காலை 10.40 மணியளவில் டுபாயிலிருந்து FlyDubai FZ-1025 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி எதிர்வரும் 25, 27 மற்றும் 30 ஆம் திகதிகளில் கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெறவுள்ள 03 மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

எனவே கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர் ஆப்கானிஸ்தான் கிரிக்கட் அணி நேரடியாக கண்டிக்கு புறப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த குழுவினரை வரவேற்க இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் குழுவொன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததுடன், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.