எகிப்தின் கெய்ரோவைச் சென்றடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அங்கே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி அரசாங்கத்தின் தேசிய சுற்றாடல் கொள்கை தொடர்பில் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.

இதன் போது 1978இல் இலங்கைக்கான தனது முதலாவது விஜயம் தொடர்பில் செயலாளர் நாயகம், ஜனாதிபதியிடம் நினைவுகூர்ந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இன்று (06) காலை எகிப்து பயணமானார்.

சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட், காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொலம்பகே மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் சென்ட்ரா பெரேரா ஆகியோரும் ஜனாதிபதியுடன் எகிப்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.