நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கட்டுமானத் துறை தோராயமாக 7% பங்களிப்பதாக இருந்தாலும், இந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நிர்மாணத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதன் காரணமாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறக்குறைய 11 இலட்சம் பேர் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் இன்று மிகவும் சிரமமான சூழலை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,வீழ்ச்சியடைந்துள்ள கட்டுமான தொழில் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்று(29) நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பினார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.