புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள காணியில், போரின் போது புலிகளால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் தங்கம் மற்றும் ஆயுதங்கள் தோண்டும் பணி நேற்று (09) மாலை ஆரம்பிக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கம் மற்றும் ஆயுதங்களை புதைத்து வைத்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, தேவிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் அகழ்வு மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு நீதவான் ஆர். சர்வணராஜாவுக்கு அறிவித்ததையடுத்து, நீதவான் மண் அள்ளும் இயந்திரம் மூலம் தோண்டிய போதும் எதனையும் காணாத காரணத்தினால் அகழ்வு பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கனத்த மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், மீண்டும் அகழ்வுக்கான திகதியை முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவிக்கும் எனவும் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.