பெண்ணொருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஊழலுக்கு எதிரான முன்னணியின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல்குமார வரக்காபொலை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வரக்காப்பொலை பொலிஸாரிடம் பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாமல்குமார தனது வீட்டில்வைத்து தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் அதனை தொடர்ந்து மேலும் நான்கு பேருடன் நாமல்குமாரவை வீட்டிலிருந்து இழுத்துவந்து மரத்தில் கட்டி வைத்து தாக்கியதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு வரக்காப்பொலை வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாமல்குமார கதிரையில் கட்டப்பட்டிருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் நாமல் குமாரவை தாக்கியதாக கூறப்படும் குறித்த பெண் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் (02) வரக்காப்பொலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.