இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்களினால் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் ஊடாக அவுஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

169 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்ளை இழந்து 164 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் ஊடாக அவுஸ்திரேலிய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ள நிலையில், இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில் இலங்கை அணியும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

நாளை இலங்கை அணியுடன் இடம்பெறும் போட்டியில் அதிக ஓட்ட வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுமானால் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குழு 1 இல் நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.