ரயில் டிக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் புகையிரத நிலைய அதிபர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் சில ரயில் நிலையங்களில் 40 ரூபாய் டிக்கெட்டை இரண்டாக வெட்டி இரண்டு பேருக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சீட்டு அச்சிடுவதற்கு திணைக்களத்திடம் இயந்திரங்கள் இருந்தாலும் அவற்றில் சில தற்போது செயலிழந்துள்ளதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.