முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று கடந்த 2ஆம் திகதி விசேட கலந்துரையாடலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த விசேட கலந்துரையாடலில் பவித்ரா வன்னியாராச்சி, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பொஹொட்டுவ சிரேஷ்டர்கள் கலந்துகொண்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதில் இணைந்து கொள்வார் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அவர் கடைசி நேரத்தில் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மகிந்த ராஜபக்சவுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்கும் வகையில் மிகக் குறுகிய காலத்திற்கு பிரதமராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சவுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்கப்பட வேண்டும் எனவும், மீண்டும் ராஜபக்சவை நிரந்தர பிரதமராக நியமிப்பது தேவையற்றது எனவும் ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்க முன்னர் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், குறித்த பிரேரணைக்கு தற்போதைய பிரதமர் தினேஷ் இந்த கலந்துரையாடலின் போது இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் இணக்கப்பாடு இன்றி கலந்துரையாடல் முடிவடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.