முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக இருந்த போது வழங்கப்பட்ட நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பிலான உத்தரவுகளை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, முன்னாள் நகர மற்றும் வீடமைப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய நகர மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் முன்னாள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோரை எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொறியாளராக இருந்த கபில ரேணுகா பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

நகர்ப்புற மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் மகிந்த ராஜபக்ச 2021 ஜூலை 8 அன்று நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் நிர்மாண நடவடிக்கைகள் தொடர்பான தொடர்ச்சியான கட்டளைகளை வழங்கியதாக மனுதாரர் கூறுகிறார்.

அந்த உத்தரவுகளினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், அவ்வாறான உத்தரவுகளை வழங்குவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இது தொடர்பான விதிமுறைகள் சட்டத்தின் முன் செல்லாது என்பதை சுட்டிக்காட்டி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.