பல முக்கியமான பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நவம்பர் 23ஆம் திகதி முதல் தளர்த்தும் வகையில் வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தடை நீக்கம் செய்யப்பட்ட பொருட்களில் குளிர்சாதன பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் போன்றன அடங்குகின்றன.

இந்த வர்த்தமானியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சராக கையொப்பமிட்டுள்ளார்.

வர்த்தமானியின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட HS குறியீடுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட பொருட்களின் இறக்குமதியானது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் முன் மேற்பார்வைக்கு விடப்பட்டு அனுமதிக்கப்படும். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.