தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் அரசாங்க வைத்தியசாலைகளுக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அண்ணளவாக 30 வீதத்தால் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி,பொருளாதார நெருக்கடி காரணமாக நடுத்தர வருமான பிரிவினர் தனியார் வைத்தியசாலை வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்,பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தொழிநுட்ப வைத்திய ஊழியர்களின் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஊழியர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளில் தங்கள் கடமைகளில் ஈடுபட்டு வருவதால், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து சிரமங்களை எதிர்கொள்வதாகவும் ஆலோசனைக் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும்,தெரிவித்துள்ளதுகருத்துரையிடுக

Blogger இயக்குவது.