அல்லாஹ்வின் மாதங்கள் அனைத்தும் சிறப்பு பொருந்தியவை. அதில் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான கண்ணியத்தை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். அதேபோன்று ரபியுலில் அவ்வல் மாதமானது இறுதித் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பிறப்பினை கொண்டு சிறப்பிக்கிறது.  பிறக்கும்போது தந்தையையும் பிறந்த சில வருடங்களில் தாயையும் இழந்த உம்மி நபியின் மாண்பினை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 
என்னை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வை ஏற்று நம்பி அன்பு வைத்து நாம் எமது செயல்பாடுகள் அனைத்தையும் அமைத்துக் கொள்ள வேண்டும். ஏனைய நபிமார்களையும் ஏற்று நடப்பது கடமை ஆகும். அந்த வகையில் இறுதியாக வந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் எல்லோரையும் விடவும் மதித்து அன்பு வைக்க வேண்டும் .அதைப்பற்றி அல்குர்ஆனிலே அல்லாஹ் குறிப்பிட்டு காட்டுகின்றான். 
தவ்பா - 
9:24  قُلْ إِن كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُم مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّىٰ يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ
(நபியே!) நீர் கூறும்; உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும், அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.

என்று அந்த அல்குர்ஆனிய வசனம் அமைகிறது. இந்த அளவுக்கு நாம் படைத்த ரப்பின் மீது அன்பு கொண்டு அவனுக்காக எமது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கிறோமோ அதை போன்று, அதைவிடவும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது நாம் அன்பு கொள்வது கட்டாயக் கடமையாகிறது. 

நபியவர்கள் மீது உண்மையான அன்பு இருப்பின் நாம் என்ன செய்ய வேண்டும்? 
• எமது வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் நபியவர்களுக்கே முதன்மை ஸ்தானத்தை கொடுக்க வேண்டும். 
• நபியவர்களின் வரலாற்றைப் படிக்க வேண்டும். அதனைப் பற்றி பிறருக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
• அவர்கள் மீது அதிகம் அதிகமாக சலவாத்து ஓத வேண்டும் காலையிலும் மாலையிலும் ஸலவாத்துக்களை அதிகப்படுத்த வேண்டும் விஷேடமாக வெள்ளிக்கிழமை நாட்களில் நபி அவர்கள் மீது ஸலவாத்து கூற வேண்டும். 

• இவர்கள் செய்த தியாகங்கள் ,வரலாற்று நிகழ்வுகள் ,படிப்பினை கதைகள் பற்றி நாம் படிப்பதோடு மட்டும் விடாது ஏனையோருக்கும் எடுத்துக் கூற வேண்டும். பத்ர் ,உஹத் போன்ற யுத்தங்கள் பற்றியும் உண்மை ,நேர்மை ,சகிப்பு ,பொறுமை போன்ற நபியவர்களின் இன்னோரன்ன பண்புகள் பற்றியும் நாம் தெரிந்து இருக்க வேண்டும். 
• நபியவர்களால் சொல்லப்பட்ட ஹதீஸ்களை ஏற்று நம்பிக்கையை வைத்து அதன்படி செயல்பட வேண்டும். 
• நபியவர்களால் நேசிக்கப்பட்ட சஹாபாக்கள் அவர்களது வரலாறுகள் , அவர்களது குடும்பத்தினர் பற்றிய விடயங்கள் போன்றவற்றை கூறி பிள்ளைகளை வழிப்படுத்த வேண்டும். 
• ஆடம்பரங்களை தவிர்த்து அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற நபியவர்களது செயற்பாடுகளை நேசிக்க வேண்டும். 

நபியவர்கள் மீது அன்பு கொள்வதற்கு அல்குர்ஆனும் ஹதீஸும் நமக்கு பெரும் வழிகாட்டிகளாக திகழ்கின்றன. அவற்றை ஏற்று நடப்பதாலே நாம் வெற்றி பெற்றவர்களாக ஆகிவிட முடியும். 
நாம் ஏன் நபியவர்கள் மீது அன்பு வைக்க வேண்டும்..? 
• ஒரு முஸ்லிமின் நோக்கம் சுவனம் செல்வதே . அதை பெற்றுக்கொள்ள நபயவர்கள் மீது அன்பு வைக்க வேண்டும். 
• ஈமான் கொள்ள வேண்டிய விடயங்களில் நபியவர்கள் மீது அன்பு செலுத்துவதும் ஒன்றாகும். 
• அல்லாஹ்வின் தூதர். அல்லாஹ் மிக மிக நேசித்த ஒருவர். 
• நபியவர்கள் மீது அன்பு செலுத்துவதன் மூலம் அல்லாஹ்வின் மீதும் இஸ்லாத்தின் மீதும் ஏனைய படைப்பினங்கள் மீதும் அன்பு செலுத்தக் கூடியவனாக இருக்கலாம். 
• அல்லாஹ்வையும் நபியவர்களையும் அதிகமாக நேசிப்பது ஈமானின் சுவையை உணரச் செய்யும். 


நபியவர்கள் பற்றி பல இலக்கியங்களும் காணப்படுகின்றன. பல எழுத்தாளர்கள் அவர்களைப் பற்றி எழுதியுள்ளார்கள். சிலரது படைப்புக்களும் நபியவர்களது வாழ்க்கையைப் பற்றி பேசுகின்றன. 


• மேற்கு வானம்
• என் வாழ்வில் மாறாத நினைவுகள்
• மஹ்ஜபீன் 
• புனித பூமியிலே
• ரஹீகூல் மக்தூம் 
• The hundred - 100 
• The Message 
• Umar Mukthar 

முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது சஹாபாக்களின் அன்பு

• “முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்அவர்கள் வஃபாத் ஆனார்கள் “என்று எவரேனும்  கூறினால் என் வாளுக்கு உரையாவார்கள்  - உமர் அலி
• ஹிஜ்ரத் செல்லும் போது அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு நடந்து கொண்ட முறை - தவ்ர் குகை பாம்பு தீண்டிய வேலை
• ஒரு சஹாபி பெண் ஜிஹாததுக்கு சென்று ஷஹீதான தனது கணவன் ,மகன் , சகோதரன் பற்றி கவலைப்படுவதை விட நபியர்களின் நலம்  பற்றி விசாரித்தமை. 


ஸலவாத்தின் மகிமை

• ஒவ்வொரு வெள்ளின்றும் அடியார்களின் சலவாத்தை மலக்குமார்கள் நபியவர்களின் ஜியாரத்தில் கொண்டு போய் சேர்ப்பார்கள். 
• ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் ஏறும்போது , நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லாதவன் ‘நாசமடைக’ என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூற  நபியவர்களும் அதற்கு ‘ஆமீன் ‘கூறியுள்ளார்கள். 
• முஸ்லிம்களில் மிகவும் கஞ்சத்தனம் உள்ளவன் யாரெனில் நபியவர்கள் மீது ஸலவாத் சொல்லாதவனே.. 


இவ்வாறு நபியவர்கள் பற்றியும் சஹாபாக்கள் பற்றியும் ஸலவாத்து பற்றியும் அவற்றின் சிறப்புக்கள் பற்றியும் நிறைய விடயங்கள் இருக்கின்றன. கண்மணி நபிகளார் மீது அன்பு வைத்து ஈருலக வெற்றியையும் பெற்றுக் கொள்வோம் .அல்லாஹ்வின் அருளையும் பெற்றுக் கொள்வோம். 

தொகுப்பு : 
பயாஸா பாஸில் 
கஹட்டோவிட்ட

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.