ஆப்கான் அணியை வீழ்த்தி இலங்கை த்ரில் வெற்றி !

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

அதற்கமைய, அந்த அணி 50 ஓவர்கள் நிறைவில் 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக அற்புதமாக துடுப்பெடுத்தாடிய இப்ராஹிம் ஸட்ரான் 162 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ரஜித 3 விக்கட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 314 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக சரித் அசலங்க 83 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ரஷிட் கான் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதற்கமைய, 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.