தேசிய அடையாள அட்டை காணாமல் போனால் அபராதம் அறவிடுவதற்கு தீர்மானம்

தேசிய அடையாள அட்டை காணாமல் போனால் அபராதம் அறவிடுவதற்கு தீர்மானம்

தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் போது அபராதம் அறவிடுவதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் காலதாதமதமின்றி விநியோகிக்கப்படும், முதல் முறை தவிர்ந்த அடையாள அட்டை காணாமல் போனதாக தெரிவித்து மீண்டும் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தவர்களிடமே இவ்வாறு அபராதம் அறவிடப்படவுள்ளது.

அவ்வாறு காணாமல் போனதற்காக மீண்டும் விண்ணப்பிப்பவர்களிடம் 2,500 ரூபா அபராதத்தொகை அறிவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்பதிவுத் திணைக்களத்தினால் ஏற்படும் காலதாமதம் காரணமாக இரண்டாவது தடவையாக மீண்டும் விண்ணப்பத்தை சமர்ப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு 250 ரூபா அபராதம் அறவிடப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.பீ.குணதிலக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 15 வயது பூர்த்தியானவர்கள் ஒரு வருடத்திற்குள் அடையாள அட்டையை பெறாமல் இருப்பார்களாயின் அவர்களிடமிருந்து 2,500 ரூபா அபராதமும், குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19 (2) இன் கீழ் இரட்டைக் குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்கள் முடிவதற்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத விண்ணப்பதாரர்களுக்கு 2,500 ரூபா அபராதமும், ஆவணங்கள் மற்றும் தவறான தகவல்கள் உள்ளிட்ட போலியான சமர்ப்பிப்பு உட்பட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற அனைத்துக் குற்றங்களுக்கும் 2500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்