அகில இலங்கை தும்பு உற்பத்தியாளர்களின் ஒன்று கூடலும், புதிய நிர்வாக தெரிவும் நேற்று (12) வென்னப்புவ "GOALDEN REVER" ல் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை தும்பு உற்பத்தியாளர் சங்கம் உதயமானது.


இந்நிகழ்வில் மதுரங்குளி பிரதேச தும்பு உற்பத்தியாளர்கள் நான்கு பேர் அகில இலங்கை தும்பு உற்பத்தியாளர் சங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த சங்கத்தின் உப தலைவராக மதுரங்குளி தும்பு உற்பத்தியாளர் சங்கத்தின் ஆலோசகர் எஸ்.எம்.பாயிஸ் (JP), அதன் தேசிய அமைப்பாளராக எஸ்.எம். சாதிக் பிரதானஇயக்குனர் சபை உறுப்பினர்களாக எம்.ஏ.எம்.ஹஸ்மத்கான் மற்றும் என்.எம்.நஸ்மி ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.


இலங்கையில் மதுரங்குளி, வென்னப்புவ ஆகிய இரண்டு சங்கங்களும் அதிக அளவிலான  அங்கத்துவர்களை கொண்ட  தும்பு உற்பத்தியாளர் சங்கமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இந்த நிகழ்வில் வடமாகாணம், வட மத்திய மாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம் என்பனவற்றை பிரதிநிதுவப்படுத்தி  8 சங்கங்கள்  பங்கு பற்றி  இருந்தது. 


இந்நிகழ்வின் போது தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம் பெற்றதோடு, அங்கு இன்று வரை ஏற்றுமதியாளர்கள் விற்பனை செய்யும் விலைகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

அப்போது சில மறைமுக மாபியாக்களின் நடவடிக்கைகள்  பற்றி சங்கத்தின்   உயர்பீட   உறுப்பினர் திரு சஞ்சீவ  மூலம் எடுத்துக் காட்டப்பட்டது. 
இதற்கமைய  விரைவில்  கொழும்பில்  உள்ள தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின்  தலைமை பீடத்தில் ஏற்றுமதியாளர்களுடன் ஒரு கலந்துரையாடலை ஏற்படுத்தித் தருவதாக  அதன் அதிகாரிகள் வாக்குறுதி  அளித்தனர்.

புதிய ஏற்றுமதியாளர்கள் உள்வாங்கப்படனும் என்ற சங்கத்தின் தலைவர் உப தலைவர்களின்  கோரிக்கைக்கு அமைய 
புதிதாக மதுரங்குளி மற்றும் ஏனைய பகுதிகளில் ஏற்றுமதி செய்யவிருக்கும் நான்கு கம்பனிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இவர்கள் மூலம் தும்பு மற்றும் தும்பு உறபத்திப் பொருட்கள்  சீனா உள்ளிட்ட பல புதிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக  தெரிவிக்கப்பட்டது. இதனை சங்கத்தின் உயர் மட்ட உறுப்பினர்  திரு சஞ்சீவ  அவர்கள்  தலைவர் மட்டும் உப தலைவருக்கு  தெளிவாக  தரவுகளுடன்  கையளித்துள்ளார்.


மதுரங்குளியில் இரண்டு தும்பு பொதி செய்யும் இடங்களாக  கடையாமோட்டை, மற்றும் சேனைக்குடியிருப்பில் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக  மதுரங்குளி  coco Lanka Fiber Industrial  Society யின் தலைவர் ஏ.எம்.நஸ்மி அவர்கள் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.