எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் சிறு விற்பனையாளர்களுக்கு கடன் அடிப்படையில் சிலிண்டர்களை வழங்குமாறு லிட்ரோ நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இவ்வாறு வழங்குவதன் மூலம் எரிவாயு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பெரும்பாலான விநியோகஸ்தர்கள் எரிவாயு சிலிண்டர்களை விற்பனையாளர்களுக்கு கடனுக்கு வழங்குவதில்லை என்றும், இதனால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.