இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகம் ஒன்று ஊடாக தனக்கு அறிமுகமான 29 வயது பெண் ஒருவரை தனுஷ்க குணதிலக்க பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பெண்ணினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.