மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதி அமைப்பதாக கூறிய ஆணை குழு நடைமுறைக்கு வர வேண்டும் என முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவருமான   கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்

கடந்த மாதம் 30 ஆம் திகதி   இலங்கை  தொழிலாளர் காங்கிரசுடனான சந்திப்பின்போது மலையக மக்களை தேசிய நீரோட்டத்துடன் இணைப்பது தொடர்பாக ஆணைக்குழு  ஒன்றை அமைக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்தார். இது மலையக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருந்தது.  ஆனால் இதற்கு இதுவரை  செயல் வடிவம்  கொடுக்கப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலையக மக்கள் தொடர்பாக ஆழமாக அறிந்தவர் என்ற வகையில்  அவருடைய அறிவிப்பு நடைமுறைக்கு  வந்து ஆணைக் குழுவின் அறிக்கைகள் அமுல்படுத்தப்படுமாக  இருந்தால் மலையக  மக்களின் வாழ்வியலில்  சாதகமான அபிவிருத்திகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு  முன்னாள் ஜனாதிபதிகளான ஜெ.ஆர் ஜெயவர்த்தன,ரணசிங்க பிரேமதாச  ஆகியோரின் துணிவான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டும். ஜனாதிபதி அறிவித்த ஆணைக்குழுவில் மலையாக மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற வகையில் உறுப்பினர்கள் சேர்த்துக் கொல்லப்படுவார்கள் என எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதியினால் முன்மொழிக்கப்பட்ட மலையக மக்களை தேசிய நீரோட்டத்தை இணைக்கும் ஆணைக்குழு வழமை போல  வெறுமனே பாவப்பட்ட சமூகம்   என கருதி சில சலுகைகளை அறிவித்துவிட்டு மலையக மக்களை திருப்திப்படுத்தலாம் என்ற எண்ணத்தை கைவிட  வேண்டும். எமது மக்களுக்கு பல்வேறு வகையிலான உரிமைப் பிரச்சினைகள் இருக்கின்றன. மலையக மக்கள் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை உரிமை ரீதியாக பாரபட்சமாக நடத்தப்படுவதுனாலே யே விரக்தி மனப்பான்மையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அரச  துறையிலும்  பெருந்தோட்ட துறையிலும்  பல்வேறு வகையான பாரபட்சங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாகவேண்டியிருக்கின்றது. கல்வி,தொழில் வாய்ப்பு, பதவி உயர்வு  போன்றவற்றிலும் இதே  நிலை தொடர்கிறது. தோட்டங்களில் குடியிருக்கின்ற ஆனால்  தற்போது  வேறு தொழில்துறையில்  ஈடுபடுபவர்கள் எந்த நேரத்திலும் தோட்ட நிர்வாகத்தின் அறிவித்தலுடன்  அவர்களை வெளியேற்றலாம் என்ற சட்ட ஏற்பாடுகள் இருக்கின்றன. இது  தற்போது சிறிது சிறிதாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு வெளியில் தெரியாத  பல்வேறு அடிமைத்தனங்களுக்கு  மலையக மக்கள் உள்ளாக்கப்பட்டு கொண்டு வருகிறார்கள். எமது மக்கள் எல்லா காலங்களிலும் பொறுமை காற்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட  ஆணைக்குழு விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும். ஒரு ஜனாதிபதி ஆணை குழுவாக இருந்தால் அது பெரிதும் வரவேற்கப்படக் கூடியதாக இருக்கும் என்றார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.