தனுஷ்க, ஷாமிக்கவைத் தொடர்ந்து பானுக்க ராஜபக்ஷவும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அயர்லாந்துடனான போட்டி தொடர்பிலேயே அவர் மீது விசாரணை நடாத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது tஇடம்பெற்ற பல சம்பவங்களின் அடிப்படையில் பானுக ராஜபக்ச மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பானுகா ராஜபக்ச அறையில் இல்லாத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி, போட்டியில் பங்கேற்பதற்காக பானுகா திரும்பி வந்தது பேருந்து புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகும் என்று என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட குழுவிற்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.