இலங்கை அணியின் ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டி இன்று!

 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி இன்று கண்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

 தொடரின் முதலாவது ஆட்டம் பல்லேகல சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தானிய அணியுடன் விளையாடும் இலங்கை அணி வீரர்களின் பெயர்கள் நேற்று வெளியிடப்பட்டன.

 இதன்படி, தசுன் ஷனக -தலைவர் பத்தும் நிஸ்ஸங்க, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தினேஷ் சண்டிமால்,இகுசல் மெண்டிஸ், வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, தனஞ்சய லக்ஷன், கசுன் ராஜித,மகேஷ் தீக்ஷன, பிரமோத் மதுஷன்,அசித்த பெர்னாண்டோ, அஷேன் பண்டார, லஹிரு குமார ஆகியோர் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.