பாடசாலை பாடப்புத்தக அச்சிடும் கட்டணம் நான்கு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல புலமைப்பரிசில் வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, உணவு பெருவதில் சிரமம் உள்ள பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை வழமையை விட அதிகரித்துள்ளதாகவும், 11 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கு தயார் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.