எகிப்து செல்கிறார் ஜனாதிபதி ரணில்

Rihmy Hakeem
By -
0

 காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று எகிப்துக்குச் செல்லவுள்ளார்.

ஜனாதிபதி விக்கிரமசிங்க அடுத்த வாரம் எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா கட்டமைப்பு மாநாட்டின் (COP27) 27ஆவது மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

முக்கிய COP27 மாநாடு ஷர்ம் அல்-ஷேக் சர்வதேச மாநாட்டு மையத்தில் இன்று முதல் நவம்பர் 18 ஆம் திகதி வரை நடைபெறும்.

மாநாட்டில் கலந்து கொள்ள 200க்கும் மேற்பட்ட அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் பல உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையில் நிறுவப்படவுள்ள காலநிலை மாற்ற செயலகம் மற்றும் இலங்கையிலும் உலக நாடுகளிலும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் தொடர்பிலான விபரங்களை முன்வைக்க உள்ளார்.

காலநிலை மாற்றத்துக்கான செயலகத்தை நிறுவ முடிவு செய்துள்ளதாக அரசாங்கம் கடந்த மாதம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 நியூஸ் ப்ளஸ்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)