உள்ளூர் சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேச வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் சில்லறை விலையாக 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ இன்றைய நிலவரப்படி 300-320 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர், சந்தையில் வெங்காயம் போதிய இருப்புகள் இல்லாததால் தான் விலை அதிகரித்துள்ளது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு வெங்காயங்களின் கையிருப்பு முடிவடைந்துள்ளதால், தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் வெங்காயங்கள் இறக்குமதி செய்யப்பட்டவை எனவும் மொத்த விற்பனை விலை அதிகரிப்பால் சில்லறை விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஒரு கிலோ சிவப்பு வெங்காயம் பி 760 ரூபாய் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.