ஏறாவூர் அலிகாரில் அறிவிப்பு துறைசார் பயிற்சி நெறி

மட்டக்களப்பு - ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் அறிவிப்பு துறைசார் பயிற்சி நெறியொன்று சனிக்கிழமை (19) இடம்பெற்றது.

வொயிஸ் ஓப் ஏறாவூர் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.தஸ்லீம் தலைமையில் ஏறாவூர் கோட்டத்திலுள்ள மாணவர்களுக்கு இப் பயிற்சி நெறி வழங்கப்பட்டது. 

இதில், வளவாளர்களாக அமைப்பின் ஆலோசகரும் சிரேஸ்ட ஆசிரியருமான எம்.ஏ.சீ.எம்.தாஸிம், இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.றம்ஸின், அறிவிப்பாளர் இஸ்ஸத் முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.முபாஸிதீன், மட்டக்களப்பு மவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.நஸீர் ஹாஜியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(எச்.எம்.எம்.பர்ஸான்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.