நசீர், விஜயதாச, நிமல் ஆகியோரின் அமைச்சுக்களை தோற்கடிக்க மொட்டுக் கட்சி எம்.பி.க்கள் முஸ்தீபு

நசீர், விஜயதாச, நிமல் ஆகியோரின் அமைச்சுக்களை தோற்கடிக்க மொட்டுக் கட்சி எம்.பி.க்கள் முஸ்தீபு

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வரவு -  செலவுத்திட்ட குழுக்கள் மீதான விவாதத்தின் போது அரசாங்கம் நெருக்கடியை எதிர்நோக்கி இருப்பதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று அமைச்சர்களது நிதி ஒதுக்கீடுகளை தாம் ஆதரிக்கப் போவதில்லை என மொட்டுக் கட்சி குழு ஒன்று தெரிவித்து வருகின்றது.

துறைமுக கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் நிதி ஒதுக்கீடு   அதேபோன்று நீதி சிறைச்சாலை விவகார, அரசியல் அமைப்பு விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் நிதி ஒதுக்கீடு, சுற்றாடல் விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீடுக்கும் தான் ஆதரிக்கப் போவதில்லை என மொட்டு கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

இந்த மூன்று அமைச்சர்களும் தங்களது நலன்களை கவனிப்பதில் அக்கறை இல்லாமல் செயற்பட்டது குறித்து ஆட்சேபனை தெரிவிக்கவே இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர்.

சுற்றாடல் அமைச்சின் நிதி ஒதுக்கீடு இரண்டாம் திகதி இடம் பெறவுள்ளது. துறைமுக கப்பல் போக்குவரத்து அமைச்சின் நிதி ஒதுக்கீடு ஐந்தாம் திகதியும் அதே தினம் நீதி சிறைச்சாலை விவகார அரசியல் அமைப்பு விவகார அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன.

இந்த விவாதத்தில் குறிப்பிட்ட மூன்று அமைச்சிக்களின் நிதி ஒதுக்கீடுகள் தோல்வி அடைந்தால் அமைச்சர்கள் இராஜினாமா செய்ய நிப்பந்திக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கருத்துகள்