புதிய பதவியில் களமிறங்கும் மஹிந்த தேசப்பரிய

  Fayasa Fasil
By -
0



உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதேச எல்லை நிர்ணயத்திற்கான தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த குழுவின் தலைவராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்ளார். ஜயலத் திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே.தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளுராட்சி மன்றங்களுக்கான பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசிய குழு நவம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு பெப்ரவரி 28 வரை நடைமுறையில் உள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)