வரலாற்று சாதனை படைத்த மினுவாங்கொடை அல் அமான்

இம்முறை வெளியான 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் மினுவாங்கொடை, கல்லொழுவ அல் அமான் முஸ்லிம் மகா வித்தியாலயம் மினுவாங்கொடை வலயத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது.

பாடசாலையில் இம்முறை 72% மாணவர்கள் உயர் தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதோடு, 2 மாணவர்கள் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.

01) K.A Halik           9A

02) M.I.M.Amri       9A

03) M.R.M.Rayyan  8A 1B

04) F.K.Farha       7A 2B

05) M.F.F.Yusra   7A 2B

06) Y.A Zahra      7A 1B 1C

07) A.H.A.Husein   6A 3B

08) M.F.F Faseeha  5A 3B 1C

09) M.F.F.Nashma  5A 3B 1C

10) M.F.F.Sheha    5A 2B 2C

11) M.M.M.Muhanath 4A 3B 2C

12) M.N.Naksha 4A 2B 3C

13) M.S. Sajeer  3A 3B 3C

14) M.F.F. Zamrooth 3A 2B 3C 1S

15) R.Sadam Hussain 2A 5B 2C

16) M.S.F.Sahla 2A 3B 4C

17) U.F.Mahira 2A 3B 3C 1S

18) M.A.F.Amana 2A 3B 3C 1S

Total Sat - 61

A/L Qualified - 44

Percentage - 72%

அதிபர் எம்.டி.எம்.ஆஸிமின் தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் சங்கம், பழைய மாணவிகள் சங்கம் என சகல தரப்பினரதும் ஒத்துழைப்போடு பாடசாலை வெற்றி நடை போட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

பாடசாலையின் பெறுபேறுகள் கடந்த ஒரு தசாப்த காலமாக கீழ்மட்டத்தில் காணப்பட்ட போதிலும், அதிபர் எம்.டி.எம்.ஆஸிம் பொறுப்பேற்றதில் இருந்து பாடசாலையின் பெறுபேறுகள் மிகவும் சிறந்த முறையில் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் பாடசாலையில் 49% ஆக இருந்த சாதாரண தர சித்தியை இந்த வருடம் 65% ஆக உயர்த்துவது அதிபரின் இலக்காக இருந்து வந்த நிலையில், இந்த வருடம் அதனையும் தாண்டி 72% ஆன மாணவர்கள் உயர் தரத்திற்கு தகுதி பெற்றுள்ளமை விஷேட அம்சமாகும்.

கருத்துகள்