திருகோணமலை சிறைச்சாலையின் புதிய பிரதான ஜெயிலராக ஆர்.மோகனராஜா கடமைகளை 
 பொறுப்பேற்பு.


திருகோணமலை சிறைச்சாலையின் புதிய பிரதான ஜெயிலராக ஆர்.மோகனராஜா கடமைகளை இன்று(21) உத்தியோகபூர்வமாக 
 பொறுப்பேற்றுக்கொண்டார்.

சிறைச்சாலையின் பிரதான ஜெயிலராக கடமையாற்றிய சம்பத் ஜெயவர்த்தன அங்குணுபொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்தே பிரதான ஜெயிலர் ஆர்.மோகனராஜா நியமிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பிரதான ஜெயிலராக கடமையாற்றி ஆர்.மோகனராஜா திருகோணமலை சிறைச்சாலையின் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர் பொலன்னறுவை சிறைச்சாலையிலும் பிரதான ஜெயிலராக கடமையாற்றிஉள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

 எப்.முபாரக்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.