நாட்டின் சில பகுதிகளில் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக வாடிக்கையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

சில எரிவாயு விநியோகத்தர்கள் உடனடி பணத்திற்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதாகவும் இதன் காரணமாக சிறிய விற்பனையாளர்களுக்கு எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு தீர்வு வழங்கும் வகையில், கடன் வசதியின் கீழ் சிறிய விற்பனையாளர்களுக்கு எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விநியோக முகவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.