2014 பயணிகள் மற்றும் 922 பணியாளர்களுடன் ‘Mein Schiff 5’ கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர் நிர்மால் சில்வா தெரிவித்தார். 

295 மீட்டர் நீளமான ‘Mein Schiff 5’ கப்பலில் 2,500 பயணிகளுக்கான வசதிகள் காணப்படுகின்றன.

இந்த கப்பல் இன்றிரவு(29) கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணிக்கவுள்ளது. 

குறித்த கப்பல் நாளை(30) இரவு 09 மணிக்கு நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக ஹார்பர் மாஸ்டர் நிர்மால் சில்வா குறிப்பிட்டார்.

இன்றைய(29) கப்பலில் நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் ஐரோப்பியாவை சேர்ந்தவர்கள் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தமது ட்விட்டர் பதிவினூடாக குறிப்பிட்டுள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.