ஓய்வுபெறும் வயதை 60 ஆகக் குறைப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியாகாத வகையில் ஆணை பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பரிசீலித்துள்ளது.

176 விஷேட வைத்தியர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை பரிசீலித்த சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு அடுத்த மாதம் 13 ஆம் திகதி பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

60 வயதில் விஷேட வைத்தியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க வேண்டும் என கடந்த ஒக்டோபர் 17 ஆம் திகதி கூடிய அமைச்சர்கள் குழு முடிவு எடுத்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.