மலேஷியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் நியமனம்

மலேஷியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மலேஷியாவின் 10 ஆவது பிரதமராக அன்வர் இப்ராஹிமை நியமிப்பதற்கு மலேஷிய மன்னர் சுல்தான் அப்துல்லா அஹமத் ஷா சம்மதம் அளித்துள்ளார் என அந்நாட்டு அரண்மனை இன்று தெரிவித்துள்ளது.

மலேஷியாவின் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் கடந்த 19 ஆம் திகதி நடைபெற்றது. 

222 ஆசனங்களுக்கான இத்தேர்தலில், எதிர்க்கட்சித் தலைவரான அன்வர் இப்ராஹிமின் பக்காதான் ஹராப்பான் எனும் கூட்டணி (நம்பிக்கை கூட்டணி) 82 ஆசனங்களை வென்றுள்ளது.

மலேஷிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்கு குறைந்தபட்சம் 112 ஆசனங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் முஹைதீன் யாசினின் பெரிகத்தான் நெஷனல் (தேசியக் கூட்டணி) 73 ஆசனங்களை வென்றுள்ளது.

75 வயதான அன்வர் இப்ராஹிம், மஹதிர் மொஹம்மதின் கீழ் துணைப் பிரதமராகவும் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.