ஆசிரியர் தொழில் மகத்தானது அது ஒரு தொழில் என்பதற்கு அப்பால் அது ஒரு சேவை அதை தியாகத்துடன் செய்கின்ற எத்தனையோ நல்ல ஆசான்களால் வீடு, ஊர், நாடு என எல்லாம் செளிப்புறுகின்றது. 

ஒரு ஆசானின் நடத்தையும் செயற்பாடும் ஒவ்வொரு மாணவனுடைய இலக்குகளையும் மாற்றுகின்றது. 

தான் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற  எண்ணத்தில் காத்தான்குடி மத்திய மஹா வித்தியலயத்தில் விஞ்ஞானப் பிரிவில் கல்விகற்றவர் தற்போதய சஊதி அராபிய நாட்டிற்கான இலங்கை தூதுவர் சகோதரர் அம்சா அவர்கள். தான் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்ற கனவையும் இலக்கையும் இல்லாமல் செய்ததும் ஒரு ஆசிரியரே. 

சகோதரர் அம்சா அவர்கள் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்கும் காலப்பகுதியில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்பித்த மாற்றுமத சமூகத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பொதுவாக மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை மட்டம் தட்டி விஞ்ஞானப்பிரிவில் இருந்து மாணவர்கள் விலகிச் செல்வதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டுவந்துள்ளார். ஒரு நாள் வகுப்பறைக்கு வந்த குறித்த ஆசிரியர் சகோதரர் அம்சா அவர்களது வயிற்றினை திருகி “நீ எல்லாம் Science படித்து என்ன செய்யப் போகிறாய்” என்று கேட்டு அவரை அசிங்கப்படுத்தி இருக்கிறார் தொடரேச்சியான இந்த செயற்பாடுகளால் தன்னுடைய வைத்தியக்கனவு மாத்திரமல்ல ஓர் பட்டதாரியாககூட  தான் வரமுடியாமல்போகுமோ என்ற சந்தேகத்தில் தனது இலட்சியத்தை கைவிட்டு  வர்த்தக துறை வகுப்பில் இணைந்து உயர்தரத்தில் சித்தியடைந்து யாழ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். 

அத்தோடு தனது தொடர் கல்வியை நிறுத்திக்கொள்ளாது இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) பரீட்சையில் சித்திபெற்று தனது சேவையை கல்வி நிர்வாகச் சேவையில் தொடர்ந்தார். அவருடைய ஆழுமையும் திறமையும் அவரை கல்வி நிர்வாக சேவையில் உயர்ந்த இடங்களுக்கு கொண்டு சென்றது. 

இப்போதுதான் காலம் எப்படி சுழல்கின்றது தான் எப்படியான நீதியாளன் Best planner என்பதை அல்லாஹ் சகோதரர் அம்சாவிற்கு விளங்கிக்கொள்ள ஓர் சந்தர்ப்பம் வழங்குகின்றான். 
அன்று SLEAS பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை நடைபெறுகின்றது அதில் அம்சா நேர்முகப் பரீட்சகராக (Interview Panel) இருக்கின்றார் அப்போதுதான் அந்த நிகழ்வு நடைபெறுகின்றது. எந்த ஆசிரியர் “நீ எல்லாம் Science படித்து என்ன செய்யப் போகிறாய்” என்று கேட்டாரோ அதே ஆசிரியர் SLEAS பரீட்சை சித்தியடைந்து நேர்முகப் பரீட்சைக்காக சகோதரர்  அம்சாவை நேர் கொள்கின்றார் இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு அதிலும்கூட சகோதரர் அம்சா மிக நீதியாக தன்னுடைய சொந்த விடயத்தை மறந்து செயற்பட்டுள்ளார். 

இவருடைய கல்வி நிர்வாகச் சேவை காலப்பகுதியில் எந்தவித இனரீதியான பாகுபாடுகளும் இல்லாமல் 1991/1992 காலப்பகுதியில் வழங்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமணத்தில் இவருடைய பங்களிப்பு மூவின சமூகங்களுக்கும் பாரியளவில் இருந்தது. 
நான் நினைக்கின்றேன் முன்னாள் கல்வி அமைச்சர் மர்ஹூம் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் அதிகமான எண்ணிக்கையில் ஒரே தடவையில் வழங்கிவைத்த ஆசிரியர் நியமணத்திற்கு பிறகு சகோதரர் அம்சா அவர்களுடைய வழிகாட்டுதலினூடாக இடம்பெற்ற நியமணமே ஒரே தடவையில் வழங்கப்பட்ட அதிக எண்ணிக்கையானதாக இருக்குமென நம்புகிறேன். 

தொடர்ச்சியான அவரது தேடல் அவரை இலங்கை வெளிநாட்டு சேவை (SLOS) பரீட்சையில் சித்தியடைந்து பல நாடுகளில் இலங்கைக்கான தூதுவராக பணியாற்றி வருகின்றார். 

எப்போது கதைக்கும்போதும் தனது பிறந்த மண்ணைப்பற்றி கவலையும் அதன் முன்னேற்றங்கள் பற்றியுமே பேசுவார் ஆனால் காத்தான்குடிக்கான தலைமைகளில் இவரை சரியாக ஊர் நலன்கருதி பயன்படுத்தியவர்கள் மர்ஹூம்களான முன்னாள் பட்டிணாட்சி மன்றத்தலைவர் அஷ்-ஷஹீட் அஹமட்லெப்பை அவர்களும் அவர்களுடைய சகோதரர் சட்டத்தரணி அல்-ஹாஜ் அப்துல் ஜவாத் சேர் அவர்களுமாகவே இருக்கும் என நினைக்கிறேன். 

இந்த ஆசிரியர் சேவையை மேற்சொன்ன ஆசிரியருக்கு முற்று முழுதாக எதிர்மாறாகவும் இந்த சேவையை தனது மூச்சாகவும் செய்தவர் மதிப்பிற்குரிய ஆசிரியர் மாத்தளையை சேர்ந்த முன்னாள் மாத்தளை ஸாஹிறா கல்லூரி உயர் வகுப்பு கணித ஆசிரியரான மக்கீன் சேர் அவர்கள். இவர் ஒரு காலத்தில் காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்பித்தவர் இவருடைய துணைவியார்கூட ஓர் விஞ்ஞானப்பாட ஆசிரியை காத்தான்குடியை சேர்ந்தவர். 

சகோதரர் அம்சா அவர்கள் விஞ்ஞானத்துறையில் இருந்து வெளியேறிச்செல்ல ஒரு ஆசிரியர் காரனமாக இருந்ததைபோன்று ஆறு மாதத்திற்குமேலாக உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் டாக்டர் கனவுடன் கல்விகற்ற என்னை விஞ்ஞானப்பிரிவ்வில் இருந்து கணிதத்தின்பால் கவர்ந்திழுத்ததும் ஓர் ஆசிரியர்தான் என்னையும் ஓர் பொறியியலாளராக பார்க்கவேண்டும் என்ற கனவு மக்கீன் ஆசிரியர் அவர்களுக்கு ஊறிப்போய் இருந்தது. நான்மட்டுமல்ல என்னுடன் ஒன்றாக கல்விகற்ற அனைவர்கள்மீதும் மிக்க அக்கரையுடன் கல்விகற்பிப்பார் நாங்கள் பிரயோக, தூய கணிதங்களுக்காக எந்த தனியார் ஆசிரியருக்கும் ஒரு ரூபாய்கூட செலவுசெய்தது கிடையாது முழு பாடத்திட்டத்தையும் 100% கற்பித்து தருவார் 12 வருடத்திற்குரிய கடந்தகால வினாத்தாள்களை ஒரு கேள்வியேனும் விடுபடாமல் செய்து முடிப்பார், இன்னும் மாதிரி வினாத்தாள், பிரபல்யமான புத்தக வினாக்கள், பிரபல்யமான பாடசாலைகளின் மாதிரி வினாப் பத்திரங்கள் என அனைத்தையும் எங்களுக்கு  விடை எழுதக்கொடுத்து அவற்றின் விடைகளை செய்தும் காட்டுவார் இப்படி நேரகாலம் பார்க்காமல் நோன்பு காலத்தில் கூட காலை 6.00 மணி தொடக்கம் 11.00 மணி எந்தவித கட்டணமும் அறவிடாமல் பாடசாலையில் பாடம் நடத்துவார். 

இவர் எத்தனெயோ பொறியியலாளர்கள், பட்டதாரிகள் என்று எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உருவாக்கியது அல்லாமல் தன்னுடைய ஓய்வூதியகாலத்திலும் பாடசாலையின் அழைப்பை ஏற்று மேலதிக எந்தக்கொடுப்பனவும் இல்லாமல் சேவை செய்தவர். தற்போதய காலத்தில் இவ்வாறான ஆசிரியர்கள் அதிகம் உருவாகவேண்டிய தேவைப்பாடு அதிகம் உணரப்படுகின்றது.

(கி.மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறுக்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.