க.பொ.த சாதாரண தரப்பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான தகவல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை முடிவுகளை எதிர்வரும் 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்காக பணிகளில் தற்போது 80 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தர்மசேன இதனை தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகள் தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன. பரீட்சை முடிவுளை வெளியிடும் தினத்தை திட்டவட்டமாக கூற முடியாது.

அவசரமாக பரீட்சை முடிவுகளை வெளியிட்டு, தவறுகள் ஏதும் நடந்தால், பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களே பாதிப்பை எதிர்நோக்குவார்கள்.

இதனால், அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்னர், இந்த மாத இறுதியில் அல்லது அதற்கு முன்னதாக பரீட்சை முடிவுகளை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.