வவுனியா இராசேந்திரங்குளம் சமுர்த்தி உத்தியோகத்தர்க்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று (24) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராசேந்திரங்குளம், விநாயகபுரம், பாரதிபுரம், பொன்னாவரசன்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சமுர்த்தி உத்தியோகத்தர் குறித்த பகுதியில் கடமையேற்றி 3 வருடங்களாகிய நிலையில் தற்போது இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்தே குறித்த கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
மக்களுக்காக அல்லும் பகலும் உழைக்கின்ற ஒரு அதிகாரியை, இவ்வாறு மாற்றம் செய்யப்படுவதை தாங்கள் ஏற்கப் போவதில்லை என்று அந்த இடத்திலிருந்து பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்..