முட்டை விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையில் முட்டையை விற்பனை செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருவதால் தற்போது முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை சில கடைகளில் முட்டை விலை, 55 ரூபாய் முதல் 57 ரூபாய் வரையிலும் விற்கப்படுவதுடன் இன்னும் சில கடைகளில் 50 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
முட்டையின் மொத்த விற்பனை விலை 52 ரூபாய் முதல் 54 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
எனவே இந்த நிபந்தனைகளால் கட்டுப்பாட்டு விலையில் முட்டை வழங்க முடியாததால், முட்டை விற்பனையை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முட்டை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலைமைகளால் நத்தார் பண்டிகைக் காலத்தில் முட்டை தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.