(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அடுத்த வாரத்தில் பாடசாலை அப்பியாசப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பு குறித்து கல்வி அமைச்சு அடுத்த வாரத்தில் நிதி அமைச்சோடு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

பாடசாலை உபகரணங்களும் அப்பியாசப் புத்தகங்களும் மலைபோல் உயர்ந்திருப்பது சம்பந்தமாக பரவலாகக் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ள நிலையிலே கல்வி அமைச்சர் இது தொடர்பாக திரைசேரி அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கின்றார்.

பாடப் புத்தகங்களையும் பாடசாலை உபகரணங்களையும் குறைந்த விலையில் விற்பது தொடர்பாக பல்வேறு மட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்று தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இது சம்பந்தமாக ஒரு நல்ல தீர்மானத்தை அடுத்த வாரத்தில் எடுக்கப் போவதாகத் தெரிவித்தார்.

அரச அச்சுக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக 40% விலை குறைவில் பாடசாலை அப்பியாசப் புத்தகங்களை விற்பனை செய்வது பற்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

டொலரின் விலையேற்றம் காரணமாக பாடசாலை உபகரணங்களும் பாடப் புத்தகங்களும் மலைபோல் உயர்ந்திருப்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகிறார்கள்.


அண்மைக்காலமாக பாடசாலை உபகரணங்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்திருப்பதன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறார்கள்.

இதேநேரம், இந்தியாவில் இருந்து கடன் அடிப்படையில் இருபது மில்லியன் டொலர் பெறுமதியான அச்சுத்தாள்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்தார். 

11 மில்லியன் புத்தகங்கள் இவ்வாண்டு அச்சடிக்கப்பட உள்ளதாகவும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எனவே, பெற்றோர்கள் அவசரப்பட்டு கூடிய நிலையில் பாடசாலை உபகரணங்களையோ, அப்பியாச புத்தகங்களையோ வாங்குவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.