ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி திரு.Borut Pahor அவர்களுக்கும் இடையில் சந்திப்பு

  Fayasa Fasil
By -
0


COP-27 காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக எகிப்தின் Sharm El Sheikh (Sharm El Sheikh) சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி திரு.Borut Pahor அவர்களுக்கும் இடையில் நேற்று (07) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஸ்லோவேனியா ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மிகவும் அன்புடன் வரவேற்றதுடன் இரு தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை நேற்றையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)