பட்டதாரிகளை அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் போது, ஏதேனும் காரணமாக நியமனம் கிடைக்கப் பெறாதவர்கள் தொடர்பாக, அமைச்சரவைக்கு முன்வைத்துள்ள விடயங்களுக்கு இணங்க அணுகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர், பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேற்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவ்வாறே, முகாமைத்துவ சேவைப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு இணங்க அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அனுமதியைப் பெற்று அனுமதி பெறப்பட்டுள்ள 690 பேரின் ஆட்சேர்ப்புத் தொடர்பாக இக்குழு அவதானம் செலுத்த உள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்

எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் வினவிய வினாக்களுக்கு அமைச்சர் பாராளுமன்றத்தில் வழங்கிய பதில்கள் பின்வருமாறு:Sajith download 3

அரசாங்க நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்பு அமைச்சின் 2019/20 முகாமைத்துவ சேவைகளுக்கான வெற்றிடங்களை போட்டி பரீட்சையின் மூலம் நிரப்புவதற்கு 2300 வெற்றிடங்களுக்கு 590 பேரைத் தெரிவு செய்வதற்கு 2022.03. 28 அன்று அனுமதி கிடைக்கப்பெற்றது. 2022.04.26 ஆம் திகதி அரச நிர்வாக சேவைகள் சுற்று நிருபங்களுக்கு அமைய இந்த நியமனம் இடம்பெற்றது.

நல்லாட்சி காலத்தில் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்களாக 7500 பேர் நியமனம் பெற்றனர். அவர்களில் 6547 பேருக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டதாகவும் அவற்றை தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அந்நிய மனங்கள் நிறுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

அதற்குப் பிரதமர் பதிலளிக்கையில்,.

பொருளாதார சிக்கல் காரணமாக அரசாங்கத்தின் ஆட்சேர்ப்புப் பணிகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் அரசசேவை ஊழியர்களின் விமர்சனங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி உள்ளதுடன் அது குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் அரசு சேவையின் விரிவு தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க அரச கொள்கையானது அரச சேவைகள் தொடர்பான முக்கிய நியமனங்களை மாத்திரம் மேற்கொள்வதற்குக் காணப்படும் சந்தர்ப்பங்களை அடையாளம் கண்டு அவற்றிற்குத் தீர்வைப் பெற்றுக் கொள்வதாகும்.

அவ்வாறே புதிய ஊழியர்களை நியமிக்காது பதவி உயர்வுகள் கூடாக இடையூறுகள் இன்றி வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறு அத்தியாவசிய நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதானது திரைசேரியில் காணப்படும் நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து தீர்வுகள் பெறப்படுவதுடன்,

பின்வரும் ஆட்சேர்ப்புத் தொடர்பான விமர்சனங்கள், கொள்கைத் தீர்மானத்திற்கு இணங்க அதற்காக பிரதமரின் செயலாளரின் தலைமையில் உபகுழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

நியமிக்கப்பட்ட குழுவினால் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு இணங்க தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய நியமனங்கள் தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என பிரதமர் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் போது தவிர்க்க முடியாத காரணங்களால் 465 பேருக்கு நியமனம் வழங்கும்போது தவற விடப்பட்டுள்ளது.

அது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாது? என்று எதிர்கட்சித் தலைவர் கேட்டார்.

இதற்கான காரணங்கள்;

ஊழியர் சேமலாப நிதியின் கீழ் தொழில் இன்மையை உறுதி செய்வதற்குத் தவறியவர்கள்.

பட்ட சான்றிதழை குறித்த தினத்தில் பெற்றுக்கொள்ளாமையால் மீண்டும் தரவுகளை சமர்ப்பிக்கத் தவறியவர்கள்.

பிரதேச செயலாளர் / கிராம உத்தியோகத்தரினால் அவசியமான உறுதிப்படுத்தல்களை வழங்க தவறியவர்கள்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனுமதி உரிய காலப்பகுதியில் சமர்ப்பிக்கத் தவறியமை.

- வெளிநாடுகளில் தங்கியிருப்பதால் விண்ணப்பிப்பதற்கு மேன்முறையீடு செய்வதற்கு முடியாது போன விண்ணப்பதாரர்கள்.

- பல்வேறு சுகாதார காரணங்களால் மற்றும் பின்தங்கிய காரணத்தால் பட்டத்தை  பெற்றுக் கொள்ளாதவர்கள்.

- பட்டத்தரத்தில் அல்லாத அரச தொழிலில் தொழில் நீண்ட காலமாக தொழில் புரிவதனால் பல்கலைக்கழக பட்டதிலான தொழிலின்மையை உறுதிப்படுத்திய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தவறியமை....


விண்ணப்பதாரிகள் குறித்த திகதிக்கு முன்னர் அவசியமான தகமைகளை உறுதிப்படுத்துவதற்கு முயற்சித்தாலும் அவர்களுக்கு நியமனம் கிடைக்காமல் போவதற்கு சந்தர்ப்பம் இன்மையை குறிப்பிட்டது.

அரச நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் 2019 வெற்றிடங்களுக்காக தொடர்பாக 2300விண்ணப்பங்கள் தொடர்பில்;  690 பேரை தெரிவு செய்துள்ளனர். 2022/3/28 இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றது. ,J 2022/4/26 அரச நிருவாக சுற்று நிருபத்திற்கு ஏற்ப இது இடம்பெற்றது.

இதில் இந்த விண்ணப்பதாரிகளை சேவைக்குள் உள்வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு பாரிய கடப்பாடுகள் இல்லை.

அதேவேளை 2300 வெற்றிடங்களுக்காக தகைமை பெற்ற 690 பேர் பேரை உடனடியாக நியமிக்க, ஆட்சேர்ப்புச் செய்யுமாறு 2022.4. 26 அரச நிருவாக சுற்று நிருபத்திற்கு இணங்க இந்த நியமனம் இடம்பெற்றது.

2019/20 முகாமைத்துவ சேவை வரையறுக்கப்பட்ட போட்டி பரீட்சையில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு இணங்க 690 பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றிருந்ததுடன் அவர்களை நியமிப்பது தொடர்பாக திரைசேரியின் உடன்பாட்டிற்கு முன் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அதற்கு இணங்க இந்நியமனம் தேர்வு செய்யப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த ஆட்சேர்ப்பின் ஊடாக வெற்றிடங்களை நிரப்புவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள 2019.12.31 ஆம் திகதிக்கு தகுதி பெற்ற முகாமைத்துவ சேவை அலுவலர்களின் வெற்றிடங்களுக்கு  2300  பேரை அந்தப் போட்டி பரீட்சையின் ஊடாக உள்வாங்கப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்ட ஊழியர் களில் 1610 பேர் மற்றும் வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையின் மூலம் 690 பேர் தெரிவு செய்யப்பட விருந்தனர்.

இந்த 690 பேரை உள்வாங்குவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டபோது திறந்த போட்டி பரீட்சை தொடர்பில் கவனத்திற்கு கொள்ளப்பட்டது.

தற்போது காணப்படும் வெற்றிடங்கள் இந்த 690 பேரை விட மேலும் ஊழியர்களை உள்வாங்குவதற்கு முடியும் முடியுமா என  நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஆராய்ந்து வருகிறது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் முகாமைத்துவ உதவியாளர்களாக 7500 பேர் நியமனம் பெற்றார்கள்.அவர்களில் 6547 பேருக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன .தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அது நிறுத்தப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் தற்போதைய ஜனாதிபதி என்பதால் இந்த 6547 பேருக்கு நியமனம் வழங்குமாறு கேட்டுள்ளார் இந்த நியமனம் வழங்கப்படுவது எப்போது. இது மறக்கப்படமாட்டாது என்றும் பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார்.

இக்ககேள்விக்கான பின்னணி தொடர்பாக மேலும் ஆராய்ந்ததன் பின்னரே  கவனத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் மேலும் பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

M M Fathima Nasriya/AKM

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.