(அப்ஹம் நிஸாம்)

 இன்று (06) மாலை ஸ்ரீபோதி மைதானத்தில் நடைபெற்ற FFSL தங்க கிணத்துக்கான கம்பஹா வலய போட்டியின் அரைஇறுதிப் போட்டியில் திஹாரிய யுனைடட் அணியை எதிர்த்து கஹட்டோவிட்ட FC (KFC) அணி களம் கண்டது.

 இதற்கு முன்பு இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் மோதி இருந்தாலும் திஹாரிய யுனைடட் அணி இதுவரை ஒரு வெற்றியையேனும்   பெற்றிருக்கவில்லை. இந்த போட்டியை வென்று தமது முதலாவது வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களம் கண்டது யுனைடட் அணி.

போட்டியின் 27வது நிமிடத்தில் அம்ஹார் தனது அணிக்காக முதலாவது கோலை பெற்றுக் கொடுக்க முதல் பாதியை KFC அணி முன்னிலை பெற்று நிறைவு செய்தது.

 இரண்டாவது பாதி தொடங்கி 10வது நிமிடத்தில் திஹாரிய யுனைடட் அணிக்காக நிப்ராஸ் ஒரு கோலை பெற்றுக் கொடுக்க போட்டி சமநிலையை அடைந்தது.

 மீண்டும் செயல்பட்ட KFC வீரர் ஹாமித் 83வது  நிமிடத்தில் இன்னொரு கோலைப் பெற்றுக் கொடுக்க KFC அணி 2-1 என்ற கோல் கணக்கில் இறுதி நேரம் வரை முன்னிலை பெற்று வெற்றியை தமதாக்கி Gampaha வலய இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது .

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.