QR முறைமை நிறுத்துவது தொடர்பில் எந்தவொரு தீர்மானங்களும் இல்லை - அமைச்சர்‌ காஞசன விஜேயசேகர

QR நடைமுறையின் கீழ் அடுத்த மாதம் முதல் எரிபொருள் விநியோகிப்பது நிறுத்தப்படுவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எட்டப்படவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

QR நடைமுறையின் கீழ் அடுத்த மாதம் முதல் எரிபொருள் விநியோகிக்கப்படாமை தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

சமூக ஊடகங்களில் கூறப்பட்டுள்ள விதத்தில் அவ்வாறான தீர்மானம் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

எரிபொருள் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும் வரை QR நடைமுறையின் கீழான எரிபொருள் விநியோகம் தொடரும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்


கருத்துகள்