அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அதற்கமைய, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நியூசிலாந்து அணி சார்பாக மிச்சல் 53 ஓட்டங்களையும் அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் ஷயீன் அப்ரிடி 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து, 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவவில் 3 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பாகிஸ்தான் சார்பாக மொஹமட் ரிஸ்வான் 57 ஓட்டங்களையும், அணித்தலைவர் பாபர் அசாம் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த வெற்றியின் ஊடாக இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தெரிவாகியுள்ளது.

நாளைய தினம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி பாகிஸ்தான் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நியூஸ் ப்ளஸ் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.